Monday, July 9, 2012

மரங்களின் சிரிப்பொலி...!





சற்று முன் பெய்த
மழையால்
குளிபாட்டபட்டு
மாநகரச் சாலையில் இருக்கும்
புது மாப்பிள்ளையான
மரங்களின் ஓரம் நிற்கையில்,
மரங்களின் சிரிப்பொலியாகக் கேட்கிறது
மழை நின்றும்
மரங்கள் சிந்தும் தூறல்கள் ...!

2 comments:

கோமதி அரசு said...

மரங்களின் சிரிப்பொலி அடிக்கடி கேட்கட்டும்,
மழை வாழ்க! மரம் வாழ்க!
இருவரால் மனிதன் வாழ்க!

Thooral said...

.தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி