Tuesday, December 4, 2012

மேகமும் எண்ணமும் ...!







எண்ணங்கள்
என்னவென
எண்ணுகையில்
மேகமாய் வந்து நின்றது ..


அழுத்தம்
வெப்பம்
சூழ்நிலை மாற்றத்தால்
எண்ணங்கள்
உருவாகிறது ..

திசை அறியாமல்
குறிக்கோள் இல்லாமல்
வான்வெளியில் பறக்கிறது ..

பல எண்ணங்கள்
கூடினால்
அழுத்தினால்
கண்ணீராய் வருகிறது ,
பல மேகங்கள்
ஒன்று கூடினால்
மழையாய்ப் பொழிகிறது ..


மேகங்கள்
காற்றோடு
உதிர்ந்து
கரைந்து
மறைந்து விடுகிறது ,
எண்ணங்களும்
போக்கோடு
போகையில்
மறைந்து விடுகிறது ...

சில எண்ணங்கள்
மட்டும்
மறையாமல்
உடன் வருகிறது
காற்றோடு
மிதந்து போகும்
மேகம் போல ..


மேகங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
வானைவிட்டு
எண்ணங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
நம்மை விட்டு ...


No comments: