எப்போதோ
புத்தகம் நடுவே
எழுதி வைத்த
பெயர்கள் ...
எப்போதோ
புத்தகம் கடைசியில்
வரைந்து வைத்த
படங்கள் ...
எப்போதோ
சேர்ந்து எடுத்த
புகைப்படங்கள் ...
எப்போதோ
சேர்ந்து ரசித்த
பாடல்கள் ...
எப்போதோ
சேர்ந்து போன
இடங்கள் ..
இப்போதும்
இனி எப்போதும்
போகும் பொது ,
படிக்கும் போது,
பார்க்கும் போது,
கேட்கும் போது,
இரசிக்கும் போது
கவிதையாகத் தோன்றுகிறது ..!
2 comments:
இது எப்போதும் கவிஞர்களுக்குத் தோன்றுவதில் வியப்பில்லை!
அருமை அருமை நண்பரே! வாழ்த்துகள்.
Post a Comment