Tuesday, September 9, 2014

என்னழகி ...






கார் மேகத்து நிறத்தழகி
மண்வாச சொல்லழகி ..
வெள்ளந்தி சிரிப்பழகி
மஞ்சல் பூசிய திங்கள் முகத்தழகி ..
குழந்தையா பழகும் அகத்தழகி..

இடமா உச்சியெடுத்த கூந்தல்,
என் உயிரைப் பிச்சியெடுக்கும்
இதழ் செங்காந்தள் ..

அவள் வளை பாடும்
இன்னிசை அலைகள் ..
அவள் முகபாவம்
ஒவ்வொன்றும் புதுக் கலைகள் ..

மையிட்ட கண்ணால்
பேசாமலே பல வார்த்தை சொல்வாள் ..
மௌனத்தை ஆயுதமாக்கி
பல நேரம் எனைக் கொல்வாள் ..

அவள் தொடுத்ததால்
அக்கூடையில்
மீண்டும்பூக்கள் பூத்தன ..
"போய் வா மச்சான் " , என
அவள் விடைகூறிய வார்த்தைகளே
எனை இன்றும் உயிரோடு காப்பன ..

பிழைப்புக்காக,
என்னவள் பிரிந்தேன்
வானம் பறந்தேன்
நாடு கடந்தேன் ..

எட்டா தூரம்
நீ இருந்தாலும் ,
பட்டுடுத்தி வாசல் வந்து
நீ வழியனுப்பிய காட்சி மறந்து போகல ..
மோனலிசா புன்னகையா
அப்போ உன்னோட சிரிப்பிக்கும் அர்த்தம் புரியல ..


3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதை அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஒரு போட்டியாளர் 2கவிதை எழுத வேண்டும் ஒன்றுதான் எழுதியுள்ளீர்கள்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

இப்படி தலைப்பிட வேண்டும்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
Thooral said...

முன்பு அனுப்பிய இரு கவிதைகளையும் ஒரு பக்கத்தில் இட்டுள்ளேன் .
தலைப்பையும் போட்டி விதிமுறைக்கேற்ப மாற்றயுள்ளேன் ..

http://nallavankavithaigal.blogspot.in/2014/09/blog-post.html

பெயர் : ஜெயராம்
e-mail: anbudanjayaram@gmail.com

அன்புடன் ,
ஜெயராம்