Tuesday, September 9, 2014

மிருகங்கள் ஜாக்கிரதை ...







வயிரின் பசித் தீர்க்க
உடலை வேட்டையாடும் மிருகங்கள்
காட்டில் உண்டு ..
காமப்பசித் தீர்க்க
உடல் வேட்டையாடும் மனித - மிருகங்கள்
இங்கு நாட்டில் உண்டு ..

மது உண்டு - மதி கெட்டு
குடி உண்டு - குடி கெட்டு
விழியிருந்தும் குருடாகி
போலியாய் முரடாகி
காமப் பசித் தீர்க்க
வேட்டையாடப் போகிறது மனித மிருகம் ..

பெண்பால் வேட்டையாடும்
மிருகம் மறந்து போனது
தான் தாய்பால் ருசித்தது
ஒரு பெண்பாலிடம் என்று ..

கருவில் இருந்தாள்
-சிசுவை அழித்தீர் ..
குழந்தையைக் கூட ,
ருசிக்குப் புசிக்க நினைத்தீர் ..

ஏனோ பெண்ணை மட்டும்
கருவறை முதல் பிணவறை வரை
நிம்மதியாய் விட்டு வைக்கவில்லை ...

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்றைய நிலையை அழகாக சித்தரிக்கும் கவிதை.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
படிக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் உறையவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Shams said...

www.writershams.blogspot.com