Saturday, October 31, 2026

அன்பின் மொழிநிலை




அம்மாவின் வயிற்றுத் தழும்புகளில்
அன்பின் ஆதி எழுத்துரு

காயம் மீது ஆற்றப்படும் களிம்பு
அன்பின் பொய்கள்

குழந்தைகள் தனக்குத் தானே
செய்து கொள்ளும் சமாதானம்
துரோகத்திற்கு அன்பு செய்யும்
அதிகபட்ச எதிர்வினை 

வேண்டுதலற்ற கடவுள் தரிசனம்
பிரதிபலனற்ற அன்பின் பிரார்த்தனை 

பிறந்த சிசுவின் கண்ணீர்
அன்பின் அழுகை 

நிரம்பிய அனையில்‌
விடாது பெய்யும் மழை
அன்பின் கோபம் 

நினைவில் வெளிச்சம் பாய்ச்சும்
மின்மினிப் பூச்சி
அன்பின் புன்னகை 

அன்பின் மொழி
பிரபஞ்சம் கடக்க உதவும் ஒளி