Friday, November 30, 2012

காலத்தில் கனிந்த கவிதைகள் ...!










எப்போதோ
புத்தகம் நடுவே
எழுதி வைத்த
பெயர்கள் ...

எப்போதோ
புத்தகம் கடைசியில்
வரைந்து வைத்த
படங்கள் ...

எப்போதோ
சேர்ந்து எடுத்த
புகைப்படங்கள் ...

எப்போதோ
சேர்ந்து ரசித்த
பாடல்கள் ...

எப்போதோ
சேர்ந்து போன
இடங்கள் ..

இப்போதும்
இனி எப்போதும்
போகும் பொது ,
படிக்கும் போது,
பார்க்கும் போது,
கேட்கும் போது,
இரசிக்கும் போது
கவிதையாகத் தோன்றுகிறது ..!

Friday, November 23, 2012

பெண்மையும் கவிதையும் ...!




பெண்மையே 
ஒரு கவிதை ...!

குழந்தையாக - ஹைக்கூ 

குமரியாக - காதல் கவிதை 

தோழியாக - புதுக்கவிதை 

மனைவியாக - சங்க இலக்கிய கவிதை 

தாயாக - தாய்மைக்கு மரபுக்கவிதை 

பெண்மையே ,
சமயங்களில் 
சில கவிதைகள் போல 
எத்தனை முறை படித்தாலும் 
புரிவதில்லையே  ...!

Tuesday, November 20, 2012

முகமில்லா நிலவு ..!







முகமில்லா நிலவொன்று
அமாவாசையன்று
எந்தன் வானில் பயணம் செய்தது ..
அந்த முகமில்லா நிலவை
நான் முதன் முதலாகக் கண்டேன்
காதல் கொண்டேன் ..
எந்தன் முகமறியாத
அந்த நிலவு ,
நான் ரசிப்பதைக்கண்டு
முதலில் நாணம் கொண்டாலும்
பின்னர்ப் பயம் கொண்டது ..

என்னைக் கண்டு ஏன் பயம் என்றேன் .
நீ யார் என்றாள் ...

எந்தன் வானில் நீ வந்ததின்
மாயம் என்ன என்றேன் ..

இத்தனை நாளாய்
இங்கே தான் இருந்தேன் ,

இதுவரை உன்னை நான்
எந்தன் வானில் கண்டதில்லை என்றேன் ...

நீ இன்று தான்
என்னை நோக்கின என்றாள் ..

உந்தன் நிலவில்லா
நாட்களில் தான் நான்
சஞ்சரிக்க முடியும் ..
உந்தன் வானில் நிலவு
இல்லை என்றால் தான்
என்னால் உன்னில் வரமுடியும் ...

முகமில்லா நீ
இன்று எப்படி என்
கண்ணில் பட்டாய் என்றேன் ..

பதில் சொல்ல
வந்தவளை
மேகம் சற்று
மறைத்து நின்றது ..

கண்மூடித் திறந்த நொடியில்
அந்த முகமில்லா நிலவும்
மறைந்து சென்றது ..

அன்று முதல்
ஒவ்வொரு முறையும்
வானைப் பார்க்கும் போது
அந்த முகமில்லா
நிலவைத் தேடுகிறேன் ..
அதன் பதிலுக்காக
காத்திருக்கிறேன் ...!

Monday, November 12, 2012

பட்டாசு ...!



நெருப்பை
தொட்டவுடன்
சத்தமிட்டு அலறுகிறது ..
நெருப்பை உணர்கிறதோ ..?

யுத்தங்களில்
இரத்தமும்
சதையும் தரும்
பரம்பரையில் தவறி வந்து
வீடுகளில் மகிழ்ச்சி தரும் பிறவி நீ..!

அந்த இரத்த வாடை விடாமல் ,
உருவாகையில்
ஏழைகளின்
வயிற்ரேரிச்சலில்
வெடித்துப் போகிறதோ
பட்டாசு ..!


தீண்டாமை யாரும் பார்ப்பதில்லை
உன்னிடம் ,
எழைச்சாதியின்  உழைப்பில் தான்
தீபாவளி சிரிப்பும்
மத்தாப்பும்
பணக்காரசாதியிடம் ..!

குழந்தைகளுக்கு
'காகிதங்கள்
மறைத்திருக்கம்
ஒளியும் ஒலியும்
போக்கே ...!


உண்மையாக
காசை இறுதியில்
கரியாக்கும்
பட்டாசு ..!

Thursday, November 8, 2012

நினைவூட்டுச்செய்தி




மறையாத 
மறக்காத 
நினையாத 
நினைவுகளிடம் ,
மாறாத 
குறையாத 
போகாத 
உணர்வுகள் 
ஒவ்வொரு முறையும் 
வந்து சொல்லி செல்கிறது ,
மறந்துவிடு என்று 
மறக்காமல் ...!