தூக்கத்தின்
பிள்ளையல்ல
கனவு ..
ஏக்கத்தின்
பிள்ளையே
கனவு ..
கரிசல் பூமியின்
விரிசலின் இடைவெளியில்
ஒட்டிக்கொண்டு
துளிர்விடும்
சிறு மொட்டாக
யாவரிடமும்
துளிர்வது
கனவு ..
சிறைபட்ட
ஆசைகளின்
உணர்சிகளின்
விடுதலை
கனவு ..
அலைகள்
கடலிலிருந்து
கரை சேர்வதாய்
உணர்சிகள்
ஆசைகள்
கரை சேர்வது
கனவு ..
செலவில்லாமல்
நினைப்பது
நடப்பது
கனவு ..
ஏழையின்
கருப்புவெள்ளை
வாழ்க்கை
வண்ணமாவது
கனவு ..
கண்கள் இல்லாத
குருடரும்
காட்சி காண்பது
கனவு ..
குருடனின்
கனவில்
வண்ணமில்லை
ஆனால்
எண்ணமுண்டு
ஓசையுண்டு
அதில்
ஆசையுண்டு ..
கனவின்
வண்ணம்
மனதின்
எண்ணம் ...
வண்ணங்கள்
மட்டுமல்ல
எண்ணங்களாலும் ஆனது
கனவு ..
இரவின் மீது
தூக்கம் கொண்ட காதலுக்கு
பிறக்கும் பிள்ளை
கனவு ..
ஆசைகள்
உணர்ச்சியால்
மனதின் சுவரில்
வரையும் ஓவியம்
கனவு ..
இலட்சியங்கள்
துளிர்விட
விதையாக
வேர்ராக
இருப்பது
கனவு ..
முடிவில்லாமல்
தொடர்வது
தொடக்கமில்லாமல்
முடிவது
கனவு ...
2 comments:
கனவுக் கவிதை நினைவு நிலத்தில் முளைக்கும் விதை!நன்று!
@புலவர் சா இராமாநுசம்..
நன்றி ஐயா ..
பொங்கல் வாழ்த்துக்கள் ..
Post a Comment