Sunday, August 17, 2025

குழந்தையும் பலூனும் 

 



குழந்தையின் கை பிடித்த மகிழ்ச்சியில்

காற்றில் பறந்த படி

துள்ளி குதிக்கத் தொடங்குகிறது பலூன் 


பலூனில் நிரப்புப்பட்டிருக்கும்

மூச்சுக்காற்றால் மீண்டும் உயிர்ப்பெற்றது

குழந்தையின் மகிழ்ச்சி 


அந்தவீட்டின் கறி சோற்றின் 

வாசம் பிடித்த பலூன்

அடுப்படி பக்கம் திரும்பியது

குழந்தையும் பின்தொடர்ந்து


கொதிக்கும் குழம்பை

ருசிபார்க்க எண்ணி

குழம்புச் சட்டியின் அருகில் சென்று

தன் ஆயுளை முடித்துக்கொண்டது 


குழந்தைகள் இந்தப் பூமியில்

சந்திக்கும் முதல் வன்முறை

பலூன் வெடித்துச் சிதறுவது

No comments: