Saturday, October 31, 2026

உயிர்வதை

 



தான் அமர்ந்த கிளைகள் வெட்டப்பட்ட பின்,

மீண்டும் அதை மரத்தோடு சேர்க்க எத்தனிக்கும்

ஒரு பறவையின் தவிப்பு;

வெண்ணிற இரவுகளின் தனிமையில்

உலர்ந்த பெயரற்றவனின் உணர்வு.


அருவருப்புடன் காலடியில் நசுக்கப்பட்ட

புழுவாக மீண்டும் மாறிய பட்டாம்பூச்சி,

பாதி உயிருடன் தன் பழைய இறகைத் தேடும் வேட்கை;

தன் அனைத்து முகமூடிகளையும் கழற்றியபடி

இறுதியில் கரப்பான் பூச்சியாக

உருமாறிய விற்பனைப் பிரதிநிதியின் உணர்வு.


சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத பறவையின் நிழல்,

ஒரு காற்றாடியை அண்ணாந்து பார்த்தபடி செல்கிறது. 


அன்பின் தாகத்திற்கு கானல் நீரை பரு

கும் 

அது உயிர்வதை

No comments: