Tuesday, November 20, 2012

முகமில்லா நிலவு ..!







முகமில்லா நிலவொன்று
அமாவாசையன்று
எந்தன் வானில் பயணம் செய்தது ..
அந்த முகமில்லா நிலவை
நான் முதன் முதலாகக் கண்டேன்
காதல் கொண்டேன் ..
எந்தன் முகமறியாத
அந்த நிலவு ,
நான் ரசிப்பதைக்கண்டு
முதலில் நாணம் கொண்டாலும்
பின்னர்ப் பயம் கொண்டது ..

என்னைக் கண்டு ஏன் பயம் என்றேன் .
நீ யார் என்றாள் ...

எந்தன் வானில் நீ வந்ததின்
மாயம் என்ன என்றேன் ..

இத்தனை நாளாய்
இங்கே தான் இருந்தேன் ,

இதுவரை உன்னை நான்
எந்தன் வானில் கண்டதில்லை என்றேன் ...

நீ இன்று தான்
என்னை நோக்கின என்றாள் ..

உந்தன் நிலவில்லா
நாட்களில் தான் நான்
சஞ்சரிக்க முடியும் ..
உந்தன் வானில் நிலவு
இல்லை என்றால் தான்
என்னால் உன்னில் வரமுடியும் ...

முகமில்லா நீ
இன்று எப்படி என்
கண்ணில் பட்டாய் என்றேன் ..

பதில் சொல்ல
வந்தவளை
மேகம் சற்று
மறைத்து நின்றது ..

கண்மூடித் திறந்த நொடியில்
அந்த முகமில்லா நிலவும்
மறைந்து சென்றது ..

அன்று முதல்
ஒவ்வொரு முறையும்
வானைப் பார்க்கும் போது
அந்த முகமில்லா
நிலவைத் தேடுகிறேன் ..
அதன் பதிலுக்காக
காத்திருக்கிறேன் ...!

1 comment:

மகேந்திரன் said...

அழகான சித்தரிப்பு நண்பரே...