Thursday, October 13, 2011

நிழல் ..!






எதிர்படும் இடங்களில்
என் நிழல்கள் பிறக்கிறது
ஒளிகளிடம்..

என் மீது மோதி
சிதறிய
வெளிச்சம்
என்னைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது ..

ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ..

ஒளி என்னை
வென்று வீழ்த்திவிட்டு
என்னைக் கடந்து போகிறது ...

8 comments:

சம்பத்குமார் said...

//ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ...//

ஒவ்வொரு வரிகளும் அருமை நண்பரே

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

சம்பத்குமார் said...

நண்பரே தயவு செய்து word verification ஐ நீக்கி விடுங்களேன்

SURYAJEEVA said...

ஒளி உங்களை வீழ்த்தியது என்று எண்ணாமல் உங்களை இரட்டிப்பாக்கி உள்ளது என்று எண்ணினால் போராட ஒரே நேரத்தில் இருவர் கிடைத்த சந்தோஷத்தில் நான்

Thooral said...

@SAMBATH...

//
//ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ...//

ஒவ்வொரு வரிகளும் அருமை நண்பரே

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
//
கருத்துக்கு மிக்க நன்றி ...

Thooral said...

@SAMBATH...
WORD VERIFICATION தற்போது நீக்கப்பட்டுவிட்டது ..
நன்றி ..

Thooral said...

@suryajeeva..
நீங்கள் சொல்வதும் அருமை நண்பரே ..
ஒளி என்னை வீழ்த்தவில்லை
என்னை புதிதாக,
நிழலாக பிறக்க வைக்கிறது ...

நன்றி...

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல கவிதை

((ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ...

வெளிச்சம் கொண்ட
ஒளி என்மீது மோதியதில்
நான் இருள் கொண்ட நிழலுக்குள்
விழுகிறேன்...)

இவை இரண்டும் ஒரே அர்தத்தை தருகின்றன, ஒன்றை தவிர்த்திருக்கலாம்!

Thooral said...

@நம்பிக்கைபாண்டியன் ..
கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி ...

வெளிச்சம் கொண்ட ஒளி மோதி நாம் இருளுக்குள் விழுகிறோம் ...
ஒளி முட்டி நாம் கீழே விழுகிறோம் ...
இவை இரண்டும் இரண்டும் இரு வேறு அர்த்தம் என்பதாக நான் கருதுகிறேன் ..


நட்புடன் ,
ஜெயராம் தி