Sunday, October 30, 2011

சில நிகழ்வுகளின் தலைகீழ் விளைவுகளில் சில

சில நிகழ்வுகளின்
தலைகீழ் விளைவுகள் ,
அந்த நிகழ்வுகளின் தன்மையாக
நாம் நினைத்ததை
முன்னம் இருந்த நிலையிலிருந்து
தலைகீழாக மாற்றிவிடுகிறது..





சரியாக நாம் செய்வது
தவறாகப் போகும் வரை தெரியாது ,
நாம் செய்வது
சரியல்ல தவறு என்று ...

வீசும் காற்று
நம் மீது வந்து மோதும் வரை தெரியாது
வந்தது
பூங்காற்று அல்ல புயல் என்று ..

சொல்வதைச் செய்வதைச் சொல்லி ,
செய்யாமல் போகும் வரை தெரியாது ,
சொன்னது செய்யப்போகும் செயலல்ல சொல் என்று ...

சொன்னதை மட்டும் செய்தால்
சூழ்நிலையின் மாற்றம் மறந்தோமெனத் தெரியாது
செயலின் பிள்ளை சூழ்நிலை பிறக்கும் வரை ..

கண்ணீர் சிந்தும் சில நேரம்
சிரிப்பு வந்து முட்டும் வரை
தெரியாது
கண்ணீரும் இனிக்கும் என்று ..

6 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

சரியாக நாம் செய்வது
தவறாக போகும்வரை தெரியாது ,
நாம் செய்வது
சரியல்ல தவறு என்று ...

இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன.

SURYAJEEVA said...

அருமை

Yaathoramani.blogspot.com said...

தங்கள் தீவீரச் சிந்தனையை அப்படியே
எழுத்தில் வடிக்கும் லாவகம் பிரமிப்பூட்டுகிறது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Thooral said...

@நம்பிக்கைபாண்டியன் ...
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ..
தொடர்ந்து தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்....

Thooral said...

@suryajeeva ...

கருத்துக்கும் மிக்க நன்றி ...

Thooral said...

@Ramani ...

தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ..