எதுகை இல்லை ,
மோனை இல்லை ,
புதுக்கவிதை
இலக்கணத்தின்
முரண்பாடு ..
கண்ணீர் உண்டு
ஆனால் துக்கமில்லை ,
உணர்ச்சியின்
முரண்பாடு ..
காக்கைக் கூட்டில்
முட்டையிடும் குயில் ,
தாய்மையின்
முரண்பாடு ..
புண்ணிய நதியை
அசுத்தமாக்கும் மனிதன்
நம்பிக்கையின்
முரண்பாடு ..
சாமியை மறந்து
சாமியாரை வணங்கும்
மனிதன் பக்தியின்
முரண்பாடு ..
நிகழ்காலம்
வரும்காலத்தின்
கடந்தகாலம் என்றால்
அது காலத்தின்
முரண்பாடு ..
நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ..
எழுத்து இல்லை ,
இலக்கணம் இல்லை ,
வார்த்தை இல்லை
விழி பேசும் மொழி ,
இது மொழியின்
முரண்பாடு ..
வெளிச்சத்தில்
தொலைந்து போகும்
இருள்
வெளிச்சத்தின்
முரண்பாடு ..
நினைக்காமல்
நினைக்க வைக்கும்
ஞாபகங்கள்
நினைவுகளின்
முரண்பாடு ..
சொல்லாமல் புரியும்
வார்த்தை
பேச்சின்
முரண்பாடு ..
முடிவில்லாமல்
முரண்படும் இந்த
முரண்பாடு
முரண்பாட்டின்
முரண்பாடு ..
6 comments:
right right...
என்னை கவர்ந்த வரிகள் ...
நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ...!
இதை படித்தப்பின் எனக்கு தோன்றிய முரண்பாடு
குவியமில்லாமல் வாழும் மனிதர்கள்
உலகின் முரண்பாடு !
@suryajeeva..
நன்றி நன்றி ...
@sembi..
u mean unfoccused man?
thambi kalakutha po.
Post a Comment