கடலே..
உன் இடம் நெய்தலே,
உனது வேலை பாய்தலே..
நதி உன்மீது கொண்ட மோகம்,
அதனால், உன்னைத் தானே வந்து சேரும்..
என் மனதின் -அசல் நகல் நீ..
நிலவே முகம் பார்க்கும்
-அழகு கண்ணாடி நீ
என் முயற்சி உந்தன் அலை..!
ஏன் எனத் தெரியவில்லை ,
காரணம் புரியவில்லை,
மாலையில் சிறை பிடித்து
காலையில் விடுவிக்கிறாய் -ஞாயிறை..!
இரவு நிலவோடு குளிர் காய்கிறாய்..
உன்னோடு உப்பு அதிகமாய் இருப்பதால் தான்,
ரோசப்பட்டாய் போலும்,
ஆழிப்பேரலையாய் தாண்டவம் ஆடினாயே..
ஏனோ உந்தன் உற்சவம்,
உலகை அழிக்கிறது..
கரையோடிருக்கும் புதையல் ரகசியம் என்ன?
ஓயாமல் வந்து எப்போதும்
தேடுகிறாயே..