Tuesday, April 6, 2010

மரணம் ஜனனம்...!




உயிரற்றவருக்காக
உயிர்க்கொண்டவைகள்
சாகடிக்கப்படுகின்றன
சவ ஊர்வல்த்தில் பூக்களாய்..!


ஆனால்,
கல்லறையிலும்
உயிர்தெழுகிறது
பூக்கள்..!


Sunday, April 4, 2010

வலிகள்...!


எதிர்த்து பேசியதால் வந்த
தந்தையின் -வார்த்தைகள்..

நான் திட்டியதால் வழிந்த
தாயின் -கண்ணீர்..

பார்த்தும் மலராமல் போன
தோழியின் -சிரிப்பு..

கேள்விக்குப் பதிலாய் வந்த
காதலியின் -மெளனம்..

சொல்லாமல் போனதால்
நண்பனின் -கோபம்..

இவையாவும்
வலிகள்,
துன்பத்தில் மனதில் பட்ட
திரவத்துளிகள்..

பூக்கள்...!




வாசம் தந்த
ஆசையில் விளைந்த ஓசைகள் நாம்..

முதல் தாலாட்டுப் பாடக்கிடவையில்,
நம்மைச்  சூழ்ந்த வாசமாய்..

வேண்டியது நடக்கக் கடவுளுக்கு
-லஞ்சமாய்..

பூப்படைந்த மலருக்கு முதலில் வைக்கும்
-அணிகலனாய்..

பருவத்தில் காதலிக்கு கொடுக்கும்
-அன்புப் பரிசாய்..

மண மேடையில் பந்தங்களை இணைக்கும்
-உறவுப்பாலமாய்..

ஊடலைக் கூடக் கூடலாக்கும்
மந்திரக்கோளாய்..

இறுதிவரை இறுதிபயணத்தில்
-தோழனாய்..

கல்லறையிலும் உடனிருக்கும்
-காவலனாய்..

இப்படிக்கு,
-பூக்கள்

விண்மீன்….!





கண்விழித்துப்  பார்ப்பது யார்,
இரவெல்லாம் ஜொலிக்கிறது-விண்மீன்..!

Saturday, April 3, 2010

கடலே....!




கடலே..
உன் இடம் நெய்தலே,
உனது வேலை பாய்தலே..

நதி உன்மீது கொண்ட மோகம்,
அதனால், உன்னைத் தானே வந்து சேரும்..

என் மனதின் -அசல் நகல் நீ..

நிலவே முகம் பார்க்கும்
-அழகு கண்ணாடி நீ

என் முயற்சி உந்தன் அலை..!

ஏன் எனத் தெரியவில்லை ,
காரணம் புரியவில்லை,
மாலையில் சிறை பிடித்து
காலையில் விடுவிக்கிறாய் -ஞாயிறை..!

இரவு நிலவோடு குளிர் காய்கிறாய்..

உன்னோடு உப்பு அதிகமாய் இருப்பதால் தான்,
ரோசப்பட்டாய் போலும்,
ஆழிப்பேரலையாய் தாண்டவம் ஆடினாயே..

ஏனோ உந்தன் உற்சவம்,
உலகை அழிக்கிறது..

கரையோடிருக்கும் புதையல் ரகசியம் என்ன?
ஓயாமல் வந்து எப்போதும்
தேடுகிறாயே..

சித்திரை….!

வந்தது சித்திரை
அது வரும் கோடையின் முத்திரை..

பள்ளிகளுக்கோ விடுமுறை
மாணவர் நெஞ்சில் இன்ப அலை..

சித்திரையின் இறுதியில் வருவான்
கதிரவன் கத்திரியாக..

நீரின் உண்மையான சுவை அறிந்தோம்
உந்தன் வெப்பத்தாலே..

இது வெயிலின்
வசந்த காலம்..

குளிரின்
இறந்த காலம்..

தென்றலும்
வெப்பத்தில் வாடும்..

இக்காலம்
வெறுத்தாலும் ,
நாம் மறுக்க முடியாது
இது மழை உண்டாக்கும் மேகங்களின்
தேனிலவு என்று..

பக்தி….!




சாராயப்பண்டம் கடையில் குடிக்க,
கூடவே மாமிசம் சுவைக்க,
குடிமக்கள் அனைவரும் அள்ளி நகைக்க,
வெள்ளிக்கிழமை- சாராயக் கடையில் அன்றோ..!
இசைப்பது- பக்தி பாடல் அன்றோ…!

ஆத்தா! என மக்கள் சாமியாடி முடிக்க,
அம்மனுக்குப் பூசைகள் நடக்க,
ஏழைகள் கூழ் குடிக்க,
மாலையில் ஞாயிறு மறைய நிற்க,
அப்பொழுதில் -கோயில் திருவிழா அன்றோ…!
இசைப்பது -மலே!மலே! பாடல் அன்றோ..!

அபசகுணம்…!

பூனை குறுக்கே செல்வது-போகும் காரியம்
நடைபெறாமல் தடுக்கும்- நம்மைப் பொருத்தவரை...!

பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன்
செல்லும் முன் செல்ல வேண்டும் -பூனையைப் பொருத்தவரை..!