பொழுது விடிந்ததில் ,
அந்தச் சேவலுக்கும்
சூரியனுக்கும்
சண்டையாம் ..
நான் எழுந்ததால்
நீ கொக்கரிதாய்
எனச் சூரியனும்,
நான் கொகக்கரித்ததால்
நீ எழுந்தாய்
என்று மாறி மாறி
மோதிக்கொண்டன ..
அதன் பின் சேவலோ
சண்டையை விட்டு விட்டு
கோவில் கூட்டத்தோடு
செல்லத் தயார் ஆனது ..
அந்தச் சேவல் இங்கு வந்த
நாள் முதல்,
தான் கடவுளுக்கு
என மமதையோடு
அலைந்து வந்தது ...
பொழுது போனால் உணவு ,
பாதுகாப்பான உணர்வு ,
இப்படி வாழ்ந்த சேவலுக்குத் தெரியாது
இன்று தான் சூரியனோடு தனக்கு
கடைசிச் சண்டை என ..
சேவல் மமதைக் கூடி ,
தான் கடவுளுக்காக என்பதை மறந்து
தான் கடவுள் என எண்ணியது ...
கடவுளை திருவிழா அன்று
காணப் போகிறோம் என்ன எண்ணி
தான் இறப்பதை மறந்தது ..
கோவில் செல்லும் புறப்பாட்டின்
தொடக்கமாகச் சகல மரியாதையுடன்
கொண்டுவரப்பட்டது சேவல்..
தலைகீழாகத் தொங்க விடப்பட்ட போது ,
"பாத்து அது சாமிக்கு நேர்ந்தது ", என ஒரு குரல்..
அந்தக் குரல் சேவலின் கர்வத்தை
மேலும் உயர்த்தியது ..
குங்குமம் இட்டு ,
பூச்சூடி,
மஞ்சள் நீராட்டி
எனச் சகல மரியாதையும் சேவலுக்குத் தொடர்ந்தது ..
அதன் பின் தொடர்ந்த
நிகழ்வில் புரிந்ததுசேவலுக்குத் தான் யார் என ..
மேலே தூக்கி
கீழே இறக்கப்பட்டது ,
கழுமரத்தில் சேவல் ..
கழுமரத்தில்
அகப்பட்ட சேவல்
வேதனையோடு
தான் நிலைமை எண்ணி இறந்தது ..
இறப்பதற்கு
சில நொடிகள் முன்புதான்
உணர்ந்தது ,
கடவுளுக்கு நேர்ந்தது
என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை ..
2 comments:
இதை எதனுடன் உருவகப் படுத்திக் கொள்வது என்று யோசித்தால் மனிதன் என்பது மட்டும் தான் நியாபகம் வருகிறது... தப்பில்லையே
மனிதன் மட்டும் அல்ல ,
மனிதனின் கர்வமும் கூட
Post a Comment