மின்சாரம் துயில் கொள்ளும் நேரத்தில் ,
இருட்டில்
குத்துவிளக்கிற்குச் சக்களத்தியாக
வந்து வீடெங்கும் வாழும்
மெழுகுவத்தி நீ ..
தேவாலயங்களில்
எங்கள் பிரார்த்தனை
ஒளிக் கொடுக்கும் நீ ,
கோவிலில் மட்டும்
அந்நியப்பட்டுப் போனாய் ..
அந்நியமாகிப் போனாலும்
எங்கள் வீட்டில்
ஒளிக் காட்டுகிறாய் ,
வழிக் காட்டுகிறாய் ...
தனிமையில் உருகி
திரியில் கருகி
யாரையோ எண்ணி
கண்ணீர் வடிக்கிறாய் ..
உன்னை அழவைத்து
உருகவைத்து
கரையவைத்து
வெளிச்சம் காண்கிறோம்
தேவனிடமும் கேட்கிறோம்
பாவ மன்னிப்பு ..
தேவன் மன்னிப்பாரா?
இந்தப் பாவ மன்னிப்பை..
5 comments:
அருமையான வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
அது ஆனந்த கண்ணீர் நைனா
@Ramani..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ...
@Suryajeeva..
மின்சாரம் இல்லாததால்
அது மெழுகுவத்தியின்
வியர்வையாகவும்
கொள்ளலாம் :)
Post a Comment