Sunday, October 9, 2011

சிசு கொலை ..


நிறைமாதக் கர்ப்பிணி
பூவின் பிரசவக்காலம்
தினந்தோறும் காலையில்
காற்றின் உதவியுடன்
பிரசவிக்கிறாள் பூ ,
தன் பிள்ளையான
வாசத்தைப் பூமிக்கு ...

பிறந்தவுடன் கையேடு அழைத்துச் செல்கிறது
தன் வாசப்பிள்ளையை ,
காற்று ஊரெங்கும் ...

ஆனால் ,
ஊருக்குள் அரக்கன் இருக்கிறான்
அவன்
புகையாக
காற்றின் பகையாக
இருக்கிறான் ...

செய்தியறிந்தக் காற்று ,
செய்வதறியாது திகைத்தது...

தன் பிள்ளை வாசத்தோடு
அங்கும் இங்கும் அலைந்தது ...

காற்றையும்
வாசத்தையும்
பார்த்த பகைவன் ,
புகையாக மாறி 
கொலை செய்தான் ...

வாசம் இறந்து கிடந்தது ..
தந்தை காற்று ,
ஓவெனக் கரைந்து அழுது வீசியது ..

இப்படியாக
பிரசவமும்
பச்சிளம் குழந்தை வாசத்தின் மரணமும்
தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

2 comments:

SURYAJEEVA said...

காற்று எப்படி தந்தையானது? என்று பொருட் பிழை எழுந்தாலும் சொல்லாடலும் கற்பனையும் அருமை மற்றும் புதுமை

Thooral said...

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ...

வாசத்தின் கருவறை பூவில் இருந்தாலும் ,
காற்று இருக்கும் இடங்களில் தான் நாம் அதை உணர முடியும் ,
பூவிடம் இருப்பதை
வாசமாக மாற்றும் கோல் காற்றிடம் இருப்பதால்
கற்றை வாசத்தின் தந்தை யாக கொள்ளலாமே ..