விநாயகர் சதுர்த்தியன்று
பிள்ளையாருக்கு
படைக்கப்பட்ட கொழுக்கட்டையை
பூசை செய்யும் முன் எடுத்து உண்டான்
அந்த வீட்டுச் சிறுவன் ..
சிறு பிள்ளை
உண்டதற்காகப் பிள்ளையார்
கோபப்படவில்லை..
அந்தப் பிள்ளையின் தாய்
கோபப்பட்டாள்..
பிள்ளையாருக்குப் பதிலாக
தன் பிள்ளைக்குப் பூசை செய்து கொண்டிருந்தாள் ..
அந்தப் பூசையைப் பார்த்த பிள்ளையார் ,
அரண்டு போய்
கொழுக்கட்டையையே பார்த்துக்கொண்டு இருந்தார் ..!
2 comments:
சாமி மட்டும் படிக்கிற பொருள சாப்பிட ஆரம்பிச்சுடுச்சுனா எல்லாரும் ஓடிடுவாங்க, அதனால் தான் சாமி சாப்பிடாம பாத்துகிட்டே இருக்கோ
@suryajeeva..
உண்மை தான் ...
கடவுளுக்காக என படைத்தது
தானே உண்டு வாழ்வதும் ,
கடவுளுக்கு என பலி கொடுப்பதும் தான்
இங்கே பக்தி யாக இருக்கிறது ..
Post a Comment