Saturday, October 15, 2011

கையேந்தும் தர்மங்கள் ..!




மின்சார இரயிலில்
இரயில் சத்தத்தையும் தாண்டி
வறுமையின் சத்தம் வருகிறது,
சில்லறையோசையில் கனத்தக் குரலில் பாடும்
குருட்டுப் பிச்சைக்காரனிடம் இருந்து 
காதுகளில் பொத்தப்பட்ட
பாட்டுப் பொட்டியின் சத்தத்திடம்,
வறுமையின் சத்தம் தோற்றுவிடுகிறது ..

அங்கு நம் கண்களும் குருடாகிறது ,
மனது சிறைப்பட்டு
இருளில் அடைப்படுகிறது ,
இங்குத் தர்மம்
இருட்டில் விடப்படுகிறது ..

நடைபாதையில் கைபேசியில் 
பேசிக்கொண்டு போகையில் 
ஒரு கைபிடித்து
யாசகம் கேட்கிறாள் சிறுமி ,
ஒருவேளை உணவாகும் என்ற
நம்பிக்கையில் ..

அந்தப் பிஞ்சு கைகள் 
தட்டி விடப்படுகிறது ,
இங்குத் தர்மம்
கைவிடப்படுகிறது ..

சுரங்கப்பாதையில் ,
பிச்சைக்காரன் மடியில்
உறங்குகிறது குழந்தை ..
பால்குடி மறவா பிஞ்சுக்கு
போதை நெடியும் ஏற்றப்படுகிறது ..

உறக்கத்தில் இருக்கும்
குழந்தை என்ன கனாக் காண்கிறது?
உறக்கத்தில் இருக்கும்
தன் வாழ்வு விழித்துக்கொள்கிறது என்றா ?இங்குத் தர்மம்
கனா காண்கிறது ..

கோயில் வாசலில்
கால் ஊனமான
ஒரு பிச்சைக்காரனிடம் இருந்து
TASMAC குடிமகனால்
சில்லறை பிடுங்கிக் கொள்ளப்படுகிறது ..
இங்குத் தர்மம்
கொள்ளையடிக்கபடுகிறது..

நள்ளிரவில்
ஒவ்வொரு பிச்சைக்காரனிடம் இருந்தும்
சில்லறைகள் எடுக்கப்பட்டு
உணவுப் பொட்டலங்கள்
போடப்படுகிறது ..

இவை அனைத்திற்கும்
முத்தாய் வருகிறது ,
இங்குத் தர்மம்
வியாபாரம் ஆக்கப்படுகிறது ..

4 comments:

SURYAJEEVA said...

பிச்சைக்காரர்கள் மீது எனக்கு கரிசனம் கிடையாது, மன்னிக்கவும்..
திருவண்ணாமலையில் பிச்சைக்காரர்கள் அதிகம், அவர்கள் கொடுக்கும் கடன் பணத்திற்கு வட்டியும் அதிகம்...

Thooral said...

நீங்கள் சொல்வதும்
உண்மைதான்,
இங்கு தர்மம் வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது...

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியா சொன்னீங்க.தர்மம் வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது.

Thooral said...

@LAKSHMI..
கருத்துக்கு நன்றி ....