Wednesday, October 19, 2011

பூமியை வாழவிடு ....!



மானுடமே,
நீ மறந்து போகிறாய் ..!
தாயின்
கருவறையில் இருந்து கொண்டே
நீ கருவறையைச் சிதைக்கிறாய் ..

கருவே
கருவறையை
சிதைக்கும் கொடுமை இங்கே நடக்கிறது ..
என்றைக்கும்
பிள்ளை மனம் கல்லாகக் கிடக்கிறது ..

தலைசுற்றிக்கிடக்கும்
பூமியின்
தலையெடுக்கப் பார்க்கிறாய் ..

பூமியை அட்டையாய்
உறிஞ்சுகிறாய் ,
நீருக்கும்
கச்சாவுக்கும் ..

புகை பிடிக்கும்
தொழிற்சாலைகள் ,
பூமிக்குப் புற்றுநோயாம்
ஓசானில் ஓட்டை ..

கடவுளை அளக்க
அணுவைப் பிளந்தான்
அணுகுண்டின் பேரழிவு ..

நதிநீர் கொண்டு
வளர்த்தப் பயிர் மறைந்து
அதில் மணல் கொண்டு
விதைக்கிறாய் கட்டிடம் ..

உன்சுயநலத் திடலில் ,
பூமிப்பந்தை
பந்தாக
பந்தாடுகிறாய் ..

வான் மழையும்
அமிலத்துளியாய்
மாறிப்போனது ...

மரத்தை வெட்டி விட்டு
குளிர் காற்றுப் பெட்டியில் வாங்கி
வீட்டிற்குள் மாட்டப்படுகிறது ..
வளிமண்டலக் காற்றில்
நஞ்சு ஏற்றப்படுகிறது ..

பூமியை சூடாக்கி
துருவங்களின்
உருவங்களை மாற்றி
வாட்டி எடுக்கப்படுகிறது ..

உயிரியல் கூட்டுக்குடும்பத்தில் ,
தனியாகச் சுயநலம் ஆட்டம் போடும்
மானுடமே ,
பூமி உன் குடும்பச் சொத்தல்ல ..
அது பொதுச் சொத்து ..

உன் தலைமுறைக்கு மட்டும் அல்ல ....
இனி வாழும் தலைமுறைக்கும் ..

நீ வாழு ,
பூமியை வாழவிடு ..

மானுடமே,
நீ மறந்து போகிறாய் ,
தாயின் கருவறையில் இருந்து கொண்டே
கருவறையைச் சிதைக்கிறாய் .. !

5 comments:

Yaathoramani.blogspot.com said...

மானுடமே,
நீ மறந்து போகிறாய் ,
தாயின் கருவறையில் இருந்து கொண்டே
கருவறையை சிதைக்கிறாய் .

மிக மிக அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

தாயோடு ஒப்பிட்டு நாம் வாழும் பூமியில் நிகழும் தவறினை உணர்த்தியவிதம் அருமை !...வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .......

Thooral said...

@RAMANI..
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ...

Thooral said...

@suryajeeva..
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

Thooral said...

@அம்பாளடியாள்...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)