சில எழுத்துக்கள்
படித்தாலே புரிந்துவிடும்
அவை கண்ணீருக்கு
சொந்தமென ..
மனித உணர்ச்சியால்
உண்டான கிளர்ச்சியால்
உண்டான கண்ணீர் பிரசவிக்கும்
எழுத்துக்கள் யாவும் உணர்ச்சியின் பாரம் தாங்க முடியாமல்
சோகத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறது ..
அந்த எழுத்துக்களை
படிக்கும் ஒவ்வொரு நொடியும் ,
எழுத்துக்களுக்கு
சொந்தமான கண்ணீரின் ஈரம்
நெஞ்சில் பிசுபிசுக்கும் ..
8 comments:
பன்னீர் மையூற்றி எழுதப்பட்ட படைப்புகள் எல்லாம்
எழுதிய சில நொடிகளில் காற்றில் கரைந்து விட
கண்ணீர் மையூற்றி எழுதப்பட்டவைகள் எல்லாம்
காலம் கடந்த படைப்புகளாக பரிமளிப்பதே
தங்கள் கருத்துக்கு அத்தாட்சி
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
சோகத்தின் வார் படத்தைச்
சொல்லுகின்ற கண்ணீரே
வேகத்தின் அளவுதனை
வேறுபடக் காட்டுமய்யா
கவிதை அருமை!
த ம ஓ 2
புலவர் சா இராமாநுசம்
காய்ந்து போன கண்ணீரின் சுவடுகள் வரிகளாய் இந்த பக்கங்களில்
உலர்ந்துபோன நினைவுகளாய்
ஈரவிழிகள் எழுதும் அழகிய
உணர்வுள்ள கவி.
@Ramani ...
தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
ஜெயராம் தி
@புலவர் சா இராமாநுசம்...
புலவர் ஐயா ..
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
ஜெயராம் தி
@suryajeeva ...
தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ...
ஜெயராம் தி
@மகேந்திரன்...
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
ஜெயராம் தி
Post a Comment