காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு,
ஒவ்வொரு பெண்ணிடமும் காற்றின் தன்மையுண்டு ..
பெண்மை ..
நீக்கமற நிறைந்த தெய்வத்தின் வடிவம் என்றால் ,
நீக்கமற நிறைந்த காற்றே ,
நீயும் பெண்தான் ..
பெண்ணே ,
சிரித்துப் பேசி வந்தாய் ..
காற்றே
தென்றலாய் வீசி வந்தாய் ..
பெண்ணே ..
நீ படி தாண்டினால் வீடு தாங்காது ..
காற்றே ..
நீ புயலாய் மாறினால் நாடு தாங்காது ..
பெண்ணே ..
நீ மாலையிட்ட மணாளன் நின்றிருப்பான் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருப்பான் ..
காற்றே ,
நீ மாலையிட்ட மரமும் நின்றிருக்கும் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருக்கும் ..
பெண்ணே ..
ஓர் உயிரின் பிறப்பு பெண்ணிலிருந்து ..
காற்றே ..
ஒரு பூவின் பிறப்பு உன்னிலிருந்து ..
காற்றே ..
நிலவாவது அவள் முகம் காட்டினால் ..
நீ மட்டும் ஏன் வானத்தின் பின் ஒளிந்துகொண்டு ,
உன் இருப்பை மட்டும் உணரவைக்கிறாய் ?
நீ நிலவை விட அவ்வளவு அழகா ?
உன் முகத்தை மட்டும் காட்டினாலே
மானுடம் காதலில் சாகுமென மறைந்திருக்கிறாயோ??
11 comments:
அருமையான வித்தியாசமான கற்பனை ஒப்பீடு
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
nallaruku machi
//பெண்ணே ..
நீ மாலையிட்ட மணாளன் நின்றிருப்பான் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருப்பான் ..//
ஹ ஹா, நல்ல நகைச்சுவை...
//காற்றே ..
நிலவாவது அவள் முகம் காட்டினால் ..
நீ மட்டும் ஏன் வானத்தின் பின் ஒளிந்துகொண்டு ,
உன் இருப்பை மட்டும் உணரவைக்கிறாய் ?//
இது காற்றை பற்றி இல்லை, பெண்ணை பற்றி தானே?
//காற்றே ..
ஒரு பூவின் பிறப்பு உன்னிலிருந்து ..//
லாஜிக் உதைக்கிறது, அது தான் கவிதையோ?
@RAMANI..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி :)
@San ..
nandri machi..:)
@suryajeeva ..
கருத்துக்கும் மிக்க நன்றி..
இந்த கருத்து பெண்ணை பற்றி என்றாலும்
இந்த தன்மைகள் காற்றிடமும் இருப்பதால்
இது காற்றை பற்றியது ..
ஆம்
அது தான் கவிதை..!
அருமையான கவிதை
@"என் ராஜபாட்டை"- ராஜா ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி :)
"மாலையில் மூடுகிறேன் ஜன்னல், கொசுக்களுக்காக காற்றும் வருவதில்லை"
எவ்வளவு ஒரு சங்கடமான வாழ்வு இல்லையா? கவிதைக்குக் கருத்தெழுத வந்தேன் அதற்கிடையில் அநத வரி என்னை இழுத்துவிட்டது. சரி....
கவிதை மிக அருமை. தாங்களே எழுதியதா அல்லது மன்றத்திலே யாரும் எழுதித்தர கொண்டு வந்ததா? மிக அருமையாக இருக்கிறது. அதற்காகவே அந்த நாகேஷ் சிவாஜி வரியை நினைவு படுத்தி நகைச்சுவையாக எழுதினேன். பிறகு கோபித்துகு கீபித்திட வேண்டாம் ஜெயராம். எனக்கு நன்றாகப் பிடித்தது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@kovaikkavi...
தங்களது முதல் வருகைக்கு
முதலில் மிக்க நன்றி ...:)
இவை நான் எழுதிய கவிதை தான் ... யாரிடமும் கடன் கேட்டு வாங்கவில்லை
நிச்சயம் என்னை நம்பலாம் ..:)
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி .
Post a Comment