Monday, December 29, 2025
Sunday, December 28, 2025
மார்கழி பூ
Monday, December 15, 2025
குழந்தைகளின் ஜன்னல்
குழந்தைகள் கைபிடித்த வாஞ்சையில்
மயங்கி வானில் பறந்துபோன பலூன்
நிச்சயம் சொர்க்கம் சேர்ந்திருக்கும்
குழந்தைகளுடன் கண்ணாமூச்சி
விளையாடும் பொழுது
முதலில் மறைவது நம் கவலை
சாலையோர அனாதை பொம்மைகளை
வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் சூட்டி
ஆதரவு அளிக்கிறார்கள் குழந்தைகள்
குழந்தைகளின்
கிறுக்கல்களும் மழலைச் சொற்களும்
கடவுளின் கையெழுத்தும் மொழியும்
குழந்தைகளின் பக்தி
மெழுகுவர்த்திக்கும்
குத்து விளக்குக்கும்
வேறுபாடு அறியாது
குழந்தைகளின் ஜன்னல்கள்
கதவுகளும் தடுப்புகளும் அற்றவை
அங்கே காற்றுக்கு எந்தத் தடையும் இல்லை
Saturday, November 1, 2025
நதியில் விளையாடி ...!
நதியில் விளையாடிய காட்சி,
ஒரு கருவாட்டின் கண்ணில்
கடைசி நினைவாகப்
பொதிந்திருக்கலாம்
மேகத்திலிருந்து நதியின்
காய்ந்த மடியில் விழுந்து
மணலில் புதைந்து மடிந்த
மழைத்துளி
இறுதியாகத் தேடியிருக்கலாம்
பால் சுரக்காத மார்பைப் போல
நீரில்லா நதியை விடாமல் அறுக்கும்
மணல் லாரி
தன் கிளீனர் இங்கே
என்றோ குளிப்பாட்டிய நினைவில்
ஒரு நொடி வந்திருக்கலாம்
ஏரிக்கரையோர அடுக்குமாடிக்குடியிருப்புச்
சுவரில் உறங்கிக் கொண்டிருக்கும் மணல்
ஏரிக்கரை நீர்ச் சலசலக்கும்
சத்தம் கேட்டு ஏங்கியிருக்கலாம்
இரவில் தன் முகம் பார்க்கும்
நீண்டக் கண்ணாடியைத்
தேடுகையில் நினைத்திருக்கலாம்
சேய்க் காணாத தாய் போல
முகத்துவாரத்தில் அலையும்
கடலின் தேடலிலிருக்கலாம்
நாகரீகத் தொட்டில் தந்து வளர்த்தத் தாயை
வளர்ச்சியெனக் காரணம் தந்து
மனிதன் இன்று மறந்தது ஏனோ
Sunday, October 26, 2025
தீபங்கள் பேசும்
ஆட்டு மந்தைகளின்
புது மேய்ப்பன் கையில்
மந்தைகள்
குடிமை உணர்வற்ற
எந்த மேய்ப்பனும்
கசாப்புக்கு
பால் குடிக்கும் குட்டிகளுக்கு
கவர்ச்சிப் புற்கள்
உயிர்களின் மதிப்பையே
ஓட்டுக்களின்
குழந்தைகளின் படங்கள்
எதுவும் ஒரு குடும்பத்தை
பிணம் கண்டு உயிர்த்தெழுந்த
அஞ்சிய அந்தத் தீபங்கள்
காற்றில் மூச்சுத் தினறி
Tuesday, October 14, 2025
Monday, October 13, 2025
Saturday, October 11, 2025
எரியும் இரவுகள்
சாவற்ற சாபம் பெற்ற நினைவுகள்
கருவுற்றுப் பிரசவிக்கும் போதெல்லாம்
கனவில் வரும் ஒரு பட்டாம்பூச்சி
பறக்க முடியாமல்
நடந்து போகிறது
விருப்பமான நிறைவேறாத ஆசைகள்
பாலைவனப் புயலில்
புழுதி படிந்தபடி நடக்கையில்
அங்குத் தெரிந்த கானல் நீரை
தன் தாகம் தீர்க்கும்
என்ற நம்பிக்கையில் குடிக்கிறது
சவப்பெட்டியில் அடக்கமான உணர்வுகள்
முகப்புத்தகத்தில் இறந்து போனவரின்
நேர்க்கோட்டில் எழுதப்பட்ட
பிறந்தநாள் வாழ்த்தின்
அர்த்தம் புரிய முயற்சிக்கிறது
அழகிய பிரமையில் மயங்கியிருக்கும்
குழந்தையின் ஆடல் போலக்
காற்றில் பறந்தபடி ஆடுகிறது
உன் பெயர் எழுதப்பட்ட காகிதம்
எரியும் இரவுகளின் வெளிச்சத்தில்
மீண்டும் ஒரு முறை
பின் தொடர்ந்து
படிக்க முயற்சிக்கிறேன்
Sunday, September 14, 2025
Saturday, August 23, 2025
அன்பை விளக்கும் சொல்
Sunday, August 17, 2025
குழந்தையும் பலூனும்
குழந்தையின் கை பிடித்த மகிழ்ச்சியில்
காற்றில் பறந்த படி
துள்ளி குதிக்கத் தொடங்குகிறது பலூன்
பலூனில் நிரப்புப்பட்டிருக்கும்
மூச்சுக்காற்றால் மீண்டும் உயிர்ப்பெற்றது
குழந்தையின் மகிழ்ச்சி
அந்தவீட்டின் கறி சோற்றின்
வாசம் பிடித்த பலூன்
அடுப்படி பக்கம் திரும்பியது
குழந்தையும் பின்தொடர்ந்து
கொதிக்கும் குழம்பை
ருசிபார்க்க எண்ணி
குழம்புச் சட்டியின் அருகில் சென்று
தன் ஆயுளை முடித்துக்கொண்டது
குழந்தைகள் இந்தப் பூமியில்
சந்திக்கும் முதல் வன்முறை
பலூன் வெடித்துச் சிதறுவது
Sunday, August 10, 2025
மழை ரொம்பப் பிடிக்கும்
ஜன்னல் வழியே மழை என்னை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது
கையில் தேநீர்க் கோப்பை
அதில் இறந்து போன நினைவுகள்
ஆவியாகிப் பறந்துப் போய்க் கொண்டிருந்தது
கையோடு என் கைபேசி
அதில் நீ அனுப்பிய பழைய குறுஞ்செய்தி ,
வந்து வந்து போனது பொய்பேசி
காதோரம் மெல்லிய பாடல்
கண்மூடி நிற்கையில் ஏதோ தேடல்
தேடல் முடிவில் கண்ணோடு அழகாய் வந்தாய்
நினைவோடு என்னைப்
பல காலம் கடந்து கடத்திச் சென்றாய்
மீண்டும் நாம்
அதே மாலை வேலை
அதே ரயில்வே சாலை
மழைத் தூறும் நடைபாதையில்
நீ எந்தன் கைப் பிடித்துக் கொண்டாய்
தண்டவாளம் பிடித்து நடக்கும்
ரயில் போல் நான் உனைப் பிடித்துக்கொண்டேன்
மழை வேகம் பிடிக்க,
நாம் குடை பிடிக்க ,
காற்று நம் மீது சாரல் தெறிக்க
வேகம் பிடித்த காற்றோடு
குடை கொண்டு சண்டையிட்டுத்
தோற்றுப்போணோம்
மழையில் நனைந்தோம் ,
காதல் மழையில் கரைந்தோம்
காலம் கடந்தது ,
கண்ணீர் மழையில்
காதல் கரைந்தது
ஜன்னல் கண்ணாடியின் வியர்வையில்
உன் பெயரை எழுதி வைத்தேன்
மழை வந்து உன்னைக் களவாடிச் சென்றது
என்றோ மழையென்றால்
ரொம்பப் பிடிக்கும் என
நீ சொன்ன ஞாபகம் ...
Saturday, August 2, 2025
அயல் மகரந்தச் சேர்க்கை
கூதிர் காலக் காலையில் மலர்ந்து
கடவுள் சேரும்
கருவறைப் பூ ஒன்று
மலத்தை உரமாய்ச் செரித்துப்
புதராய் மலரும்
கல்லறைப் பூ ஒன்று
அங்கு வந்த ஒரு
வண்டால் நிகழ்ந்தது
அயல் மகரந்தச் சேர்க்கை
அன்பால் விளைந்து
சாதியற்று புதியதோர் வகையாய்
புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது
ஒரு மொட்டு
புதியதோர் மொட்டு
மலரக் கண்டு சினம் கொண்ட
காவல் கூட்டம்
கல்லறைக் காட்டைக் கொளுத்தியது
தீட்டெனச் சொல்லப்பட்ட
புதியதோர்
மொட்டை கருவறுத்து
பூவைத் தீயில் பொசுக்கியது
தீயில் கருகியப்
பூக்களின் சாம்பல்
காற்றில் பறந்தபடி
தனது காதலைத் தேடத் தொடங்கியது
மீண்டும் ஒரு வண்டு
பூக்களைத் தேடிப் பறந்தபடி
புதியதோர் அயல் மகரந்தச்
சேர்க்கைக்குத் தயாரானது
Friday, July 11, 2025
மகனதிகாரம்
மகனே நீ பிறக்கையில்
உன் அழுகைக்குப் பிறந்தது என் சிரிப்பு ...
உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்
என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...
நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்
நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...
உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்
கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...
உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்
நான் என்னும் அகங்காரத்தையும்
உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்
என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது
உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்
உண்ணாமல் வயிறு நிரம்புகிறது
உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்
சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...
Friday, July 4, 2025
பெண்மையும் கவிதையும்
அகமும் பேசும்
புறமும் பேசும்
அழகாய் பொய் பேசும்
கேட்க கேட்க மயக்கும்
கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்
அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்
கருவாவது ஓர் இடத்தில்
வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்
குழந்தையாக ஹைக்கூ
குமரியாகக் காதல் கவிதை
தோழியாகப் புதுக்கவிதை
மனைவியாக எதிர் கவிதை
தாயாக மரபுக்கவிதை
சில நேரம்
எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..
அப்பா
உலகில் அதிகம் எழுதப்படாத கவிதை
சரியாகப் புரிந்து கொள்ளப்படாத கவிதையும் கூட
பிள்ளையின் முதல் அழுகைக்கு
பிறக்கிறார் அப்பா
அப்பாவின் கைகள் பற்றிக் கொள்ளும் தருணம்
நம்பிக்கையும் பற்றிக்கொள்ளும்
அம்மாவின் நிழலில் நம்மை இளைப்பாற விட்டு
சூரியனை அணைத்துக் கொள்ளும் பெரு வெளிச்சம்
கத்தரித்துக்கொள்ள இயலாத பேரன்பின் தொப்புள் கொடியை
யாருக்கும் தெரிய வண்ணம் உள்ளுக்குள்ளே வைத்திருப்பார்
நம் கண்ணீர்த் துளிகள் துடைத்தெறியும் விருப்பமான கைக்குட்டை
கனவிலும் வந்து விருப்ப உணவு ஊட்டி விட்ட மாய வித்தைக்காரர்
என்னில் இருக்கும் அத்தனையும் உன்னிலிருந்து வந்தது
இடியுடன் கூடிய மழையாய் கண்டிப்புடன் அன்பு நீ தந்தது
அப்பாவின் செருப்பு நாம் அணியும் வரை
அந்தக் கால்களின் வலி புரிவதில்லை
Saturday, March 29, 2025
காலமும் காதலும்
Saturday, February 15, 2025
நட்சத்திரங்களின் வருகை
சூரியனாக இருந்த உன் அன்பின் வெளிச்சம்
நிலவாக என்னை வாழ வைத்தது
ஒரே வானில் என்றும் சேர முடியாத நமது பெருவாழ்வு
கிரகணத்தின் சில கணத்தில் மட்டும் விதிவிலக்கு
திடீரென மெல்ல மெல்ல விட்டு விலகி
தொலைதூர நட்சத்திரமானாய்
பின்பு ஒரு நாள் மின்சார வெளிச்சத்தில் தொலைந்தும் போனாய்
இந்த வெளிச்சம் மட்டும் ஏன் என் வாழ்வை இருட்டடித்தது ?
உன் ஒளி குடித்துப் பழகிய நிலவு நான்
வேறு ஆயிரம் நட்சத்திரங்களின் வருகையும்
என்னை நிரப்புவதில்லை
பல ஒளி ஆண்டுக் கடந்த பின்னும்
உனது வெளிச்சம் என் நெஞ்சில் குறையவுமில்லை
வானில் எங்கும் உன்னைத் தேடியபடிக் கரைகிறேன்
இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடலாம்
வெளிச்சத்தில் தொலைத்ததை எதில் தேட?


















.jpg)